*இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, October 26, 2021

*இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!! *

*இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!! *

கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும்.

இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment