2021-2022 கல்வியாண்டில் ஆசிரியர்/மாணவர் விகிதாசார அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல்- கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல் சார்ந்து ஆதிதிராவிட ஆணையரகம் அழைப்பாணை
ADW - இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல்- கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தல் சார்ந்து ஆதிதிராவிட ஆணையரகம் அழைப்பாணை
பார்வை ஒன்றில் காணும் அரசாணையின்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஆசிரியர் / மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர்/காப்பாளர் பணியிடங்களில் பணிநிரவல் மூலம் நிரப்பிட அனுமதி அளித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியும் ஆணையிடப்பட்டுள்ளது. பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின்படி மேற்படி பணிநிரவல் பணிக்கான ஆசிரியர் / மாணவர் விகிதாச்சாரக் கணக்கீட்டினை 30.09.2021 அன்றைய நிலையிலான மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்து அரசு ஆணையிட்டுள்ளது.
மேற்காணும் பொருள் தொடர்பாக 30.09.2021 அன்றைய நிலையிலான ஆசிரியர்/மாணவர் விகிதாச்சார கணக்கீட்டின்படி மாவட்ட வாரியாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு சென்னை-5, ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் 08.12.2021 காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் உபரி இடைநிலை ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக மாவட்ட கண்காணிப்பாளருடன் அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தனி வட்டாட்சியர் (ஆதிந) மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment