_*முக்கிய செய்தி: PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, January 12, 2022

_*முக்கிய செய்தி: PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்!!!*_

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்.

PGTRB போட்டித் தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது . தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை , நிர்வாகக் காரணங்களினால் வரும் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்களினால் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..



No comments:

Post a Comment