_*மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & 18 மாத நிலுவைத்தொகை – எகிறும் எதிர்பார்ப்பு! 👇👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, August 12, 2023

_*மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & 18 மாத நிலுவைத்தொகை – எகிறும் எதிர்பார்ப்பு! 👇👇👇*_

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & 18 மாத நிலுவைத்தொகை – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகிறது. அத்துடன் 18 மாத காலமாக நிலுவையில் இருந்து வரும் அகவிலைப்படி தொகையும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நிதியாண்டிற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 7 -வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 42% வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2ம் கட்டமாக மீண்டும் 4% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகையும் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


அதன்படி அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இதனால் ஊழியர்களின் சம்பளமும் வெகுவாக அதிகரிக்கும். அத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் 2 லட்சம் வரையில் கிடைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment