ஒரே கிளிக்கில் PF இருப்பை அறிந்துகொள்ளலாம் – முழு விளக்கங்களுடன்!
நான்கு விதங்களில் எளிதாக எப்படி PF இருப்பை அறிந்துகொள்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PF இருப்பு:
EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படையில் 12 சதவீதம் ஒரு நிலையான வாய்ப்புத் தொகை PF ஆக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இப்படி டெபாசிட் செய்யப்படும் PF தொகையை பெறுவது என்பதனை பார்க்கலாம். முதலில், UAN போரட்டலில் மொபைல் எண்ணை பதிவு செய்து KYC செயல்முறையை முடித்தவுடன் 9966044425 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
இதன் பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு PF பேலன்ஸ் விவரங்கள் அனைத்து மொபைல் எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்படும். மேலும், 7738299899 என்கிற எண்ணிற்கு நேரடியாகவும் செய்தி அனுப்பினால் PF இருப்பு தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், இன்னொரு வழியின் மூலமாகவும் PF இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, EPFO ன் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பணியாளர்களுக்கான விருப்பத்தினை தேர்வு செய்யவும். அடுத்ததாக, சேவை பக்கத்தில் உள்ள பாஸ்புக் என்கிற விருப்பத்தை தேர்வு செய்தும் PF இருப்பை அறியலாம். மேலும், அரசாங்கம் அறிமுகம் செய்த UMANG செயலியின் மூலமாகவும் PF இருப்பை அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment