_*தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.4000 உரிமைத்தொகை – யார் யாருக்கு? அரசு அறிவிப்பு!!👇👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, December 14, 2023

_*தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.4000 உரிமைத்தொகை – யார் யாருக்கு? அரசு அறிவிப்பு!!👇👇👇*_

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.4000 உரிமைத்தொகை – யார் யாருக்கு? அரசு அறிவிப்பு!!


தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை ரூ.4000 உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இது வரையிலும் 3 மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான தொகை நாளை முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் பரிசீலனை செய்யப்பட்ட 7.35 லட்சம் பயனாளர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. அதே போல, இந்த மாதமும் லட்சக்கணக்கான பயனர்கள் ரூ.1000 உரிமைத்தொகைக்காக பரிசீலனை செய்திருக்கும் நிலையில் தகுதியானர்களுக்கு நாளை முதல் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவிடும்.

மேலும், இந்த குடும்பத் தலைவிகளுக்கு இது வரை வழங்கவேண்டிய தொகையையும் சேர்த்து ரூ.4000 ஆக வழங்கப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்தில் அரசின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட இருக்கும் நிலையில் நிதி பிரச்சனையால் ரூ.1000 பெறும்பயனர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தான் செய்யுமே தவிர குறையாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment