வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.600க்கு பெற வேண்டுமா? இப்படி அப்ளை செய்யுங்க!!
ரூ.300 மானியத்துடன் சேர்த்து எப்படி வீட்டு உபயோக சிலிண்டரை ரூ.600க்கு பெறுவது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்:
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் வருகிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டரின் விலைக்கு தகுந்தவாறு பொதுமக்களுக்கு மத்திய அரசின் சார்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது
சமீபத்தில் தான் மத்திய அரசு சிலிண்டருமான மானியத்தை ரூ.200லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டரை மானியத்துடன் சேர்த்து ரூ.600க்கு வாங்க முடியும். மேலும், 2023-24 ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்களும் பயன் பெற விரும்பினால் www.pmuy.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
No comments:
Post a Comment