_*TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் - சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, December 18, 2023

_*TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் - சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!👇👇*_

_*TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் - சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!👇👇*_


தமிழகத்தில் 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அதற்கான முடிவுகள் வெளியாகவில்லை. அதனால், TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த டிசம்பர் மாதம் அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், தற்போது வரையிலும் குரூப் 2 தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிடாத நிலையில் தேர்வாளர்கள் கொந்தளித்து #wewantgroup2result என்கிற ஹேஷ்டேக்கை தேர்வாளர்கள் ட்ரெண்டாக்கி வந்தனர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், TNPSC அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி 12 அன்று வெளியிடப்படும் என்று TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

No comments:

Post a Comment